ப.சி. கட்சி காங்கிரசில் ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, முறைப்படி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது.

இதற்கான விழா டெல்லியில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து சென்ற சுமார் 8,00ஜனநாயகப் பேரவை நிர்வாகிகளும் தொண்டர்களும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழக பார்வையாளருமான அம்பிகாசோனி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் சிதம்பரத்துக்கு இணையாக அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கும் முக்கியத்துவம்வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், மத்திய அமைச்சர் இளங்கோவன் உள்பட காங்கிரசின் எல்லா கோஷ்டித்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் தொண்டர்களுடன் சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு கட்சியில்இணைந்த ஜனநாயகப் பேரவைத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சோனியா வரவேற்றார்.

அப்போது பேசிய சிதம்பரம், மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனேயே கட்சியை காங்கிரசில் இணைக்க முடிவு செய்துவிட்டோம்.ஆனால், அடுத்ததடுத்து சோனியா காந்தி அவர்கள் பல்வேறு பணிகளில் மூழ்கிவிட்டதால், காலதாமதம் ஆகிவிட்டது என்றார்.

பின்னர் கட்சியில் இணைந்த ஜனநாயகப் பேரவைத் தொண்டர்களை வரவேற்று வாசன் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+