கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி: பிரதமர் பேச்சு!
சென்னை:
வயிற்றுவலி காரணமாக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக அவர் வயிற்று வலியால் கருணாநிதி அவதிப்பட்டதாகத் தெரிகிறது. அதிகாலையில் வலி மிகவும் அதிகமாகிவிடவே, காலை 6.45 மணியளவில் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை முழுநேர ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை நிருபர்களிடம் தெரிவித்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பார்வையாளர்கள் கருணாநிதியைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
மருத்துவமனையில் நிருபர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார்.
அதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதற்கிடையே அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவக் குறிப்பில், கருணாநிதிக்கு செரிமானம் தொடர்பாகபிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் ஓரிரு நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications