For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உளவுத்துறை டிஜிபியாக அலெக்ஸான்டர் நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Alexanderதமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு டிஜிபியாக ஏ.எக்ஸ். அலெக்ஸாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை உளவுப்பிரிவை ஏடிஜிபி மட்டத்திலான அதிகாரிகளே கவனித்து வந்தனர். இப்போது தான் முதல் முறையாக உளவுப் பிரிவின் தலைவர்பதவியில் டிஜிபியை நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறையின் புலி என்று வர்ணிக்கப்படும் அலெக்ஸாண்டர், கடந்த அதிமுக ஆட்சியில் உளவுப் பிரிவின் தலைவராகஇருந்தார். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் வெறுப்புக்கு ஆளானார். இதனால் மண்டபம் அகதிகள் முகாம் இன்சார்ஜ் ஆகநியமிக்கப்பட்டு, வெறும் ஜீப் மற்றும் 10 போலீஸ்காரகளுடன் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால், கடந்த ஓராண்டாகவே அலெக்ஸாண்டருக்கு மீண்டும் முக்கியத்துவம் தந்து வந்தார் ஜெயலலிதா.

தமிழக குற்றப்பிரிவு டிஜிபியாக அவரை நியமித்தார். மேலும் சீருடைப் பணியாளர் (போலீஸ் செலக்ஷன்) தேர்வு வாரியத்தின்தலைவராகவும் ஆக்கினார். இந்தப் பணிகளைச் செய்து கொண்டே முதல்வருக்கு முக்கியமான ஆலோசனைகளையும் வழங்கிவந்தார்.

இந் நிலையில் அவரை உளவுப் பிரிவின் டிஜிபியாக நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் ஷீலாராணி சுங்கத் நேற்றிரவு பிறப்பித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் எதிர்க் கட்சிக் கூட்டணியைஉடைப்பது உள்ளிட்ட வேலைகளில் அலெக்ஸான்டர் களமிறக்கப்படுவார் என்கின்றனர் எதிர்க் கட்சி விஐபிக்கள்.

இதுவரை உளவுப் பிரிவுத் தலைவராக இருந்த வேங்கடகிருஷ்ணன், கிரைம் பிரிவு டிஜிபியாக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை வீட்டுவசதி வாரியத்தின் தலைவரான நெயில்வால், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராககூடுதல் பொறுப்பையும் வகிப்பார்.

கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் படை பட்டாலியனின் கமாண்டன்ட்டாக இருந்த சிவனான்டி இடமாற்றம்செய்யப்பட்டு, சென்னை சிஐடி போலீஸ் பிரிவின் க்யூ பிரான்ச் எஸ்பியாக நியமிக்ககப்பட்டுள்ளார். இதுவரை இந்தப் பணியில்இருந்து கந்தசாமி, ரகசிய புலனாய்வுப் பிரிவின் எஸ்.பியாக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X