மக்களவை தேர்தல்: காங் செலவிட்ட ரூ. 125 கோடி!!
டெல்லி:
கடந்த மக்களவைத் தேர்தலுக்காக ரூ. 125 கோடி செலவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
தேர்தல் கமிஷனிடம் அந்தக் கட்சி சமர்பித்துள்ள செலவுக் கணக்கில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில் பா.ஜ.க. பத்திரிக்கைகள், டிவி, சாலை விளம்பரங்கள் மூலம் நடத்திய பெரும் செலவிலானவிளம்பரங்களை எதிர்கொள்ளவே தங்களுக்கு இவ்வளவு செலவானதாக காங்கிரஸ் கூறுகிறது.
இதுவரை தனது தேர்தல் செலவை பா.ஜ.க. சமர்பிக்காதது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கை, டிவி விளம்பரம், போஸ்டர்கள், கட்-அவுட்களுக்காக மட்டும் ரூ. 49 கோடி செலவாகிவிட்டதாக காங்கிரஸ் கணக்குகொடுத்துள்ளது.
கட்சித் தலைவர்களை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் பிரச்சாரத்துக்கு நாடு முழுவதும் அழைத்துச் சென்ற வகையில் ரூ. 8.71 கோடிசெலவானதாகவும், ரயில், கார் செலவுகள் ரூ. 34 லட்சத்தை எட்டிவிட்டதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
சுமார் 400 வேட்பாளர்களுக்காக ரூ. 60 கோடி செலவு செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த செலவுக் கணக்கில் மக்களவைத்தேர்தலோடு சேர்த்து நடந்த ஆந்திரா, கர்நாடகா, ஒரிஸ்ஸா, சிக்கிம் மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல் செலவை காங்கிரஸ்சேர்க்கவில்லை.
ரூ 125 கோடியும் மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகையாகும்.
சிபிஎம் செலவிட்ட தொகை:
மக்களவைத் தேர்தலுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 8.26 கோடி செலவிட்டதாக தேர்தல் கமிஷனிடம் கணக்கு சமர்பித்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 28 லட்சம் மட்டுமே செலவிட்டதாகக் கூறியுள்ளது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ரூ. 4 கோடி மட்டுமே செலவு செய்ததாகவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ரூ. 31 லடசம்மட்டுமே செலவிட்டதாகக் கூறியுள்ளன.
தேர்தல் செலவுக் கணக்கை சமர்பிக்க வரும் 30ம் தேதி தான் கடைசி நாளாகும். பா.ஜ.கவைப் போலவே பா.ம.கவும் இன்னும் கணக்கைஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications