40,000 டன் விமானம் தாங்கிக் கப்பல் கட்டும் இந்தியா!!
பனாஜி:
25 விமானங்கள் இயக்கும் அளவுக்கு, 40,000 டன் எடையுள்ள விமானம் தாங்கிக் கப்பலை இந்தியாவே கட்ட ஆரம்பித்துள்ளது.
இதற்காக முதல் கட்டமாக ரூ. 3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தகவலை இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் பிரகாஷ் தெரிவித்தார்.
கொச்சியில் உள்ள ராணுவ கப்பல் கட்டும் தளத்தில் இந்தப் பணி நடக்கவுள்ளது என்றார்.
இதுவரை ரஷ்யாவிடம் இருந்து தான் விமானம் தாங்கிக் கப்பல்களை வாங்கி இயக்கி வந்தது இந்தியா. இப்போது தான் முதன்முறையாகஇந்த பிரமாண்டத் திட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
பிரான்சிடம் இருந்து நீர்மூழ்கிகள் வாங்கும் திட்டம் குறித்துக் கேட்டபோது, கடற்படைத் தளபதியிடம் நிருபர்கள் கேட்டபோது பதிலளித்தமறுத்த அவர், இது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எப்படியும் நவீன ரக நீர்மூழ்கிகளை வாங்கித் தான் ஆக வேண்டும்என்றார்.
இதற்கிடையே கர்நாடகத்தில் கார்வாரில் கட்டப்பட்டு வந்த சீ-பேர்ட் கடற்படைத் தளத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதார அத்திட்டத்தின் துணை இயக்குனர் கமாண்டர் கார்னிக் தெரிவித்துள்ளார்.
புதிய ராணுவத் தளபதி:
இதற்கிடையே இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போதைய தளபதி ஜெனரல் விஜ்ஜின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து சிங் அந்தப்பதவியை ஏற்பார்.
-
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கிளைமேக்ஸ் வந்தாச்சு.. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு.. பரபரக்கும் தேர்தல் களம் -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்












Click it and Unblock the Notifications