கலங்கரை விளக்கங்களில் நவீன கருவிகள்: டி.ஆர்.பாலு
சென்னை:
நாட்டில் உள்ள அனைத்து கலங்கரை விளக்கங்களிலும் ரூ.100 கோடி செலவில் நவீன கருவிகள் பொருத்தப்படும் என்று கப்பல்போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
சென்னை அருகே பழவேற்காட்டில் நவீன கலங்கரை விளக்கத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
கரையில் இருந்து 100 கடல் மைல் தொலைவில் வரும் கப்பலில் உள்ள மாலுமிக்கு கப்பல் தற்போது இருக்கும் இடம், பயணம்செய்ய வேண்டிய பாதை ஆகிய விவரங்களைத் தெளிவாக புதிய வசதி உதவுகிறது.
8 செயற்கைக்கோள்கள் மூலம் கடலில் கப்பல் உள்ள இடத்தைக் கணக்கிட்டு தெரிவிக்க முடியும். இதில் 5 மீட்டர் மட்டுமேவித்தியாசம் இருக்கும்.
கப்பல்களின் பாதுகாப்பு, மீன்வள நிர்வாகம், சுற்றுச் சூழல் பாதிப்பைத் தவிர்த்தல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவும்கப்பல்கள் உள்ள இடத்தைக் கண்டறிந்து அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்தவும் ஏ.ஐ.எஸ். என்ற நவீன வசதியை உருவாக்கத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 167 கலங்கரை விளக்கங்களிலும் இந்த வசதி ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்படும்.
கடல் அரிப்பால் பழவேற்காடு பகுதியும் பாதிக்கப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அரிப்பைத் தடுக்க தேசிய கடல்தொழில்நுட்ப நிலையத்தின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பக்கிங்காம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்போது பழவேற்காடு முகத்துவாரத்தில் தூர் எடுத்து தேவையான நேரத்தில் கடல்நீர் உள்ளே வரும் வகையில் மதகு அமைக்கப்படும்.
சேது சமுத்திரத் திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றார் டி.ஆர்.பாலு.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications