குப்பையில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
திருக்கோவிலூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பொன்னேரி பகுதி வாக்காளர் அடையாள அட்டைகள்,திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஏராளமான வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியாமல் அவதிப்பட்டனர்.வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும் கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் இந்தக் குழப்பம்ஏற்பட்டது.
இந் நிலையில் மதுரை, சென்னை தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பைத் தொட்டிகளில்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் திருக்கோவிலூர் குப்பைத்தொட்டியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதி வட சென்னை எம்.பி. தொகுதியின் கீழ் வருகிறது. இந்தத் தொகுதியில் அடங்கியபொன்னேரி, மாதவரம், மணலி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகள்,திருக்கோவிலூர் கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்தன.
50க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் கிடந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் வருவாய் அதிகாரிகள் விரைந்து வந்துஇவற்றைக் கைப்பற்றினர். பொன்னேரி தாசில்தாருக்கு இதுகுறித்துத் தகவல் தரப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications