போர் வேண்டாம்: புலிகளுக்கு அரசு வேண்டுகோள்
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் போருக்கு திரும்ப வேண்டாம்என்றும் இலங்கையின் இந்து சமயத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடைக்கால சுயாட்சி அதிகாரத் திட்டத்தின் கீழ் நிபந்தனையற்ற முறையில், காலம் தாமதிக்காமல் உடனே மீண்டும் அமைதிப்பேச்சு வார்த்தையைத் தொடங்க இலங்கை அரசு முன் வர வேண்டும்; இல்லையென்றால் போருக்குத் திரும்புவதைத் தவிர வேறுவழியில்லை என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நேற்று கூறினார்.
இந் நிலையில் தேவானந்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புலிகள் போருக்குத் திரும்பக் கூடாது என்றும், அரசியல் ரீதியானதீர்வை பேச்சுவார்த்தை மூலம் அடைய முயற்சிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதிபர் சந்திரிகா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் ஏதும் வரவில்லை என்றாலும் பிரபாகரனின் பேச்சு தொடர்பாகவிவாதிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications