அவதூறு செய்திகள்: சங்கர மடம் எச்சரிக்கை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு சங்கர மடம் குறித்து அவதூறான, தவறான தகவல்களைவெளியிடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் சங்கர மடம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மட மேலாளர் சுந்தரேச அய்யர் கூறுகையில், சங்கரராமன் கொலையைத் தொடர்ந்து பாரம்பரியம் மிக்க காஞ்சிகாமகோடி மடம் குறித்து சில பத்திரிக்கைகளும், டிவி களும் அவதூறான, தவறான, பொய்யான தகவல்களை வெளியிட்டுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற தகவல்களால் லட்சக்கணக்கான பக்தர்கள் மனம் வேதனை அடைகிறது. அவர்களது மத உணர்வுகள்புண்படுகின்றன.
உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் இதுபோன்ற பத்திரிக்கைகள், டிவிக்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுகுறித்து மட நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என்றார்.
ஜாமீன் மனுக்கள் நாளை விசாரணை:
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் வழக்கில் ஜெயேந்திரர் சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. இந் நிலையில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு ஜாமீன் மனுவை ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன்னிடம் போலீஸ் விசாரணை முடிவடைந்து விட்டது, அதேபோல குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பும் முடிந்து விட்டது. மேலும், முக்கியக்குற்றவாளிகளான கதிரவன், சின்னா ஆகியோர் போலீஸ் கொடுமைப்படுத்தியதால்தான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
எனவே, என்னை ஜாமீனில் விட வேண்டும் என்று ஜெயேந்திரர் கோரியுள்ளார். இதேபோல, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் ஜாமீன் கோரிஜெயேந்திரர் சார்பில் சென்னை தன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு ஜாமீன் மனுக்கள் மீதும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications