ஜெயேந்திரர் மீதான புகார்கள் பொய்: சுஷ்மா
சென்னை:
ஜெயேந்திரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மாசுவராஜ் கூறினார்.
வேலூர் மத்திய சிறையில் ஜெயேந்திரரை சந்தித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சங்கரராமன் கொலையில் தனக்கு தொடர்புள்ளதாக சங்கராச்சாரியார் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வருகின்றன. இது குறித்து நான்அவரிடம் கேட்டபோது, அதெல்லாம் உண்மையில்லாத தகவல்கள், நான் போலீசிடம் அப்படிக் கூறவே இல்லை என்று என்னிடம்தெரிவித்தார் ஜெயேந்திரர்.
இதனால் ஜெயேந்திரர் மீதான இந்தப் புகார்கள் பொய்யானவை என்பது தெரிகிறது. விரைவில் இவற்றை நீதிமன்றத்தில் நிரூபித்து விட்டுவெளியே வருவார் ஜெயேந்திரர் என்றார் சுஷ்மா சுவராஜ்.
வீட்டுக் காவல்:
இதற்கிடையே சங்கராச்சாரியாரை சிறைச்சாலைக்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கைவிடுத்துள்ளது.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்,
பாரம்பரியம் மிக்கது காஞ்சி மடம். அதன் பீடாதிபதியான ஜெயேந்திரரை இந்த அரசு கைது செய்த விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.அவரது தனி அந்தஸ்தை மனதில் வைத்து அவருக்கு உரிய மரியாதையை அரசு வழங்க வேண்டும்.
உடனே அவரை வீட்டுக் காவலுக்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக ராஞ்சியில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்திலும்தீர்மானம் போட்டுள்ளோம். இந்தக் கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.
விஎச்பி போராட்டம்:
இந் நிலையில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை வேலூரில் தொடர் உபவாசப் போராட்டங்களில் விஸ்வ இந்து பரிஷத்ஈடுபட்டுள்ளது. இத் தகவலை அந்த அமைப்பின் அகில உலக துணைத் தலைவர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications