9 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சென்னை:
மும்பை வளையல் தயாரிப்புத் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதற்காக அழைத்துக்கொண்டு செல்லப்பட இருந்த 9 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும்திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் கண்காணிப்பு மையதொலைக்காட்சியில் போலீஸார் பஸ் நிலைய பயணிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு நபர், 9 சிறுவர்களை அழைத்துக் கொண்டு சென்றதைப் பார்த்து சந்தேகமடைந்தனர். உடனடியாகபோலீஸார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை மடக்கி விசாரித்தனர்.
அப்போது அவரது பெயர் சார்லஸ் என்றும் சிறுவர்களை மும்பைக்கு ரயிலில் அழைத்துச் செல்வதற்காக சென்னைவந்திறங்கியதும் தெரிய வந்தது.
மும்பையில் உள்ள ரக்ஷா என்டர்பிரைசஸ் என்ற வளையல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்ப்பதற்காகஇந்த சிறுவர்களை திருவண்ணாமலையிலிருந்து சார்லஸ் அழைத்து வந்துள்ளார்.
தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இவர்கள் மும்பை செல்லவிருந்தனர். இதையடுத்து குழந்தைத் தொழில் தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீஸார் சார்லஸை கைது செய்தனர்.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட 9 சிறுவர்களும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைத் தொழிலாளர் மீட்பு இல்லத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சிறுவர்கள் வளையல் நிறுவனத்தில் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு கொத்தடிமைகளாக வேலைக்குசேர்க்கப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை வீட்டினரின் அனுமதியுடன் தான் சார்லஸ் அழைத்துவந்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications