சங்கராச்சாரியார் மீது அனுராதா 19 பக்க புகார்
காஞ்சிபுரம்:
சங்கராச்சாரியார் மீது எழுத்தாளர் அனுராதா ரமணன் போலீசாரிடம் 19 பக்க புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சங்கரச்சாரியார் மீது, பெண்ணிடம் தாகத முறையில் நடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாகப்பேசுதல் போன்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் வைத்து அனுராதாவிடம் எஸ்.பி. பிரேம்குமார் தவிர பெண் போலீஸ் அதிகாரிகளும் முதல் கட்ட விசாரணையை நடத்திவாக்குமூலம் வாங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த 19 பக்க புகாரில் காஞ்சி மடத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்தை முழு விவரங்களுடன் தந்துள்ளார் அனுராதா.
நெல்லை காஞ்சி மடத்தில் போலீஸ் ரெய்ட்
காஞ்சி மடத்தில் சோதனைகள் நடத்தப்பட்டுவிட்ட நிலையில், இப்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காஞ்சி மடத்தின் கிளைகளைபோலீசார் சோதனையிடவுள்ளனர்.
இந்த மடங்களை சோதனையிடுவதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கூடுதல் எஸ்.பி. சக்திவேல் தலைமையில் போலீஸ் படை நெல்லைவந்துள்ளது. நெல்லை தவிர தமிழகத்தின் பிற கிளைகளிலும் சோதனைகள் நடக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications