யுவஸ்ரீ விவகாரத்துக்கு முற்று புள்ளி: மடம் நிம்மதி!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Jayendrarகாஞ்சி சங்கர மடம் சார்பில் நடத்தப்படும் மாணவியர் விடுதியில் தங்கிப் படித்து வந்தபோது மரணமடைந்த மாணவி யுவஸ்ரீயின்மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை என்று காஞ்சிபுரம்போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

காஞ்சி சங்கர மடம் சார்பில் நடத்தப்பட்டு வரும் காமகோடி மாணவியர் விடுதியில் தங்கிப் படித்து வந்தவர் யுவஸ்ரீ. 11 வயதான யுவஸ்ஸ்ரீகடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் தனது விடுதி அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

இது தொடர்பாக போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டது. இந் நிலையில் ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து மடம் தொடர்பான மர்மச்சாவுகள், செக்ஸ் புகார்கள் ஆகியவை வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் யுவஸ்ரீயின் சாவிலும் மர்மம் இருக்கலாம் அவரது தாயார் நளினி இரு தினங்களுக்கு முன் புகார் கொடுத்தார். இதையடுத்துநளினி, அவரது சகோதரர் சேதுராமன் ஆகியோரை போலீசார் நேற்று விசாரணைக்காக காஞ்சிபுரம் வரவழைத்தனர்.

அவர்களிடம் யுவஸ்ரீயின் மரணம் குறித்து எஸ்.பி. பிரேம்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது இப்போது மடம் குறித்துவரும் தகவல்களால் யுவஸ்ரீயின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் எழுந்ததாகவும், ஆனால், அவருக்கு பிறந்ததிலிருந்தே வயிற்று வலியும்,பிரச்சினையும் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் இந்த மரணம் தொடர்பாக காஞ்சி மடம் மீதே ஒட்டுமொத்தமாக புகார் சொல்லவும் தாயராக இல்லை என்றனர். மேலும் நளினிகொடுத்த ஆவணங்களில் யுவஸ்ரீ பல ஆண்டுகளாக தொடர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்ததும் உறுதியானது

இதையடுத்து யுவஸ்ரீ வயிற்று வலி காரணமாகவே இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.

இதன் மூலம் யுவஸ்ரீ சாவில் சங்கர மடத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது போலீஸ். இந்தவிவகாரம் இனி கிளப்படாது என்றே தெரிகிறது. தொடர் சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மடத்துக்கு இந்த விஷயத்தில் தான் முதல்முறையாக போலீஸ் தரப்பில் இருந்து நிம்மதியான விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+