சதுர்வேதியின் 25 பவுன் அறைஞான் கயிறு!
![]() |
சென்னை:
பிரேமானந்தாவுக்கெல்லாம் பிரேமானந்தாவாகக் கருதப்படும் சதுர்வேத சாமியாரிடம் கைப்பற்றப்பட்ட நகைக் குவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பெண்களிடம் செக்ஸ், ஓரினச் சேர்க்கை, ஆள் கடத்தல், தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு என ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியுள்ள சதுர்வேத சுவாமிகளின் கனரா வங்கி லாக்கரை போலீசார் சோதனையிட்டபோது ஏகப்பட்ட தங்க, வைர, வெள்ளி நகைகள் சிக்கின.
அதன் லிஸ்ட்:
1. தங்க பூணூல்- 35 பவுன்
2. தங்க அறைஞான் கயிறு- 25 பவுன்
3. பஞ்சாயுத மாலை- 35 பவுன்
4. கவச குண்டலம்- 10 பவுன்
5. கை காப்புகன்- 50 பவுன்
6. சங்கு, சக்கர தோடு- 5 பவுன்
7. தாமரை மணி மாலை- 10 பவுன்
8. தங்க கிருஷ்ணர் சிலை- 10 பவுன்
9. ராமானுஜர் சிலை- 10 பவுன்
10. வைரங்கள் பதிக்கப்பட்ட 6 மோதிரங்கள்
11. கைவங்கி- 10 பவுன்
12. மரகதம் உள்ளிட்ட ராசிக் கற்கள்
இதைத் தவிர டம்ளர் உள்ளிட்ட வெள்ளியில் ஏகப்பட்ட பொருட்களும் லாக்கரை நிறைத்திருந்தன.
இவை அனைததும் சைதாப்பேட்டை நீதிமன்றத்திடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிடிபட்ட இந்த நகைகளை உடல் முழுவதும் அணிந்து கொண்டு, கிருஷ்ணர் வேடமும் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலையும் வைத்துக் கொண்டு பக்தைகளிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவது சதுர்வேதியின் வேலையாக இருந்து வந்தது.
![]() |
இந்த நகைகள் தவிர ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தின் முக்கிய நகர்களில் பல கோடி மதிப்புக்கு பங்களாக்கள், நிலங்களும் சதுர்வேதிக்குச் சொந்தமானவையாக உள்ளன. இதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.
மக்களை நல்வழிப்படுத்த வந்த இந்த சாமியாரிடம் உள்ள கார்களின் எண்ணிக்கை 4. இதில் ஒன்று பென்ஸ் கார்.
இந்த நகைகள், சொத்துக்கள், கார்கள் அனைத்தும் பக்தர்களிடம் இருந்து சதுர்வேதி பல வகைகளிலும் பறித்தது என்கிறார்கள்.
சதுர்வேதியின் மோசடிகள் குறித்து சென்னை துணை கமிஷ்னர் ராஜேந்திரன், உதவி கமிஷ்னர் அன்புமொழி ஆகியோர் தலைமையிலான படைகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தப் படையின் அதிகாரிகளைச் சந்திக்கும் பல பெண்களும் ஆண்களும் தாங்கள் சதுர்வேதியிடம் மோசம் போனதை பட்டியலிட்டு வருகிறார்கள்.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!














Click it and Unblock the Notifications