Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயேந்திரர் வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞராக, கூடுதல் அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆஜராவார் என்றுதமிழக அரசு தெரிவித்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் வழக்குகளில் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இரு வழக்குகளிலும் அரசுத் தரப்பில் ஆஜராகும் புதிய சிறப்பு வழக்கறிஞரை தமிழக அரசுஅறிவித்துள்ளது.

கூடுதல் அரசு வழக்கறிஞரான எஸ்.ஜெயக்குமார், இரு வழக்குகளிலும் தமிழக அரசின் சார்பில் ஆஜராவார்.

கடந்த 2002ம் ஆண்டு கூடுதல் அரசு வழக்கறிஞராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் வைகோ மீதான பொடாவழக்கில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜரானார். இதேபோல, நக்கீரன் கோபால் மீதான வழக்கிலும் அவர்அரசுத் தரப்பில் வாதாடியுள்ளார்.

தற்போது ஜெயேந்திரர் தொடர்பான வழக்குகளில் ஆஜராக ஜெயக்குமாரை தமிழக அரசு நியமித்துள்ளது. ஜெயேந்திரர் மீதுஎதிர்காலத்தில் தொடரப்படும் பிற வழக்குகளிலும் இவரே வாதாடக் கூடும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+