சாமியாரை மிரட்டிய எஸ்ஐ கைது
கோவில்பட்டி:
போலிச் சாமியார் என்று வழக்குப் போட்டு விடுவதாக கூறி சாமியாரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற பணிநீக்கம் செய்யப்பட்டசப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாமியார்கள் தொடர்ச்சியாக போலீஸில் சிக்கி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி ஒரு நிஜச்சாமியாரிடம் பணம் பறிக்க முயன்ற, பணிநீக்கம் செய்யப்பட் சப் இன்ஸ்பெக்டர் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி அருகே உள்ள சிந்தலக்கரை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் வைத்திருப்பவர் ராமமூர்த்தி சாமியார். இவர்கோயிலில் தங்கி அருள் வாக்கு சொல்லி வருகிறார்.
இவரது கோயிலுக்கு ஒருவர் வந்துள்ளார். நீ போலிச் சாமியார் என்று போலீஸில் புகார் வந்துள்ளது. பெண்களையும் நீ மோசடிசெய்துள்ளாய், பாலியல் முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளாய். எனவே அதிலிருந்து உன்னைக் காப்பாற்ற பணம் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பல வழக்குகளை உன்மீது போட வைப்பேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
அவரது தோற்றம், பேச்சு ஆகியவற்றின் மீது சந்தேகம் கொண்ட சாமியாரும், அங்கிருந்த பக்தர்களும் அந்த நபரை விசாரிக்கத்தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் தான் வந்த டிஎவிஎஸ்50 வாகனத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார்.
இதையடுத்து அனைவரும் சேர்ந்து அவரை விரட்டிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். காவல் நிலையத்தில் நடந்தவிசாரணையில் அந்த நபரின் பெயர் சுப்பையா பாண்டியன் என்பதும், பணிநீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் என்றும்தெரிய வந்தது.
திருச்செந்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் அவர் பணியாற்றியுள்ளார். இவர் மீது எழுந்த பல்வேறு புகார்கள்,மோசடிகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
கோவில்பட்டி போலீஸார் சுப்பையா பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications