"காதல் மன்னன்" ஜெமினிகணேசன் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழம்பெரும் நடிகரும், காதல் மன்னன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான ஜெமினி கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெமினி கணேசனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது மகள் கமலா செல்வராஜுக்கு சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம் ஜி.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
85 வயதாகும் ஜெமினி கணேசன் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்தான் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.












Click it and Unblock the Notifications