ஓரின சேர்க்கை: கிறிஸ்தவ பாதிரியார் கைது
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மாணவரைக் கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியாரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் கிறிஸ்தவ மிஷன் மையம் உள்ளது. இதன் இயக்குநராக பாதிரியார் ஜெயராஜ் கிருஷ்ணன் என்பவர்உள்ளார். இந்த மையத்திற்குச் சொந்தமாக மாணவர் விடுதியும் உள்ளது.
இந்த விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார்கொடுத்தார். அதில், பாதிரியார் தன்னை மிரட்டியும், வற்புறுத்தியும் கடந்த 4 ஆண்டுகளாக ஓரினச் சேர்க்கை நடத்தி வருகிறார். மறுத்தால்உடலில் சூடு போட்டு கொடுமைப்படுத்துகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பாதிரியார் ஜெயராஜ் கிருஷ்ணன், அவரது விடுதிக் காப்பாளர் மகாலிங்கம் மற்றும் பாதிரியாரின் உதவியாளர் அன்புஆகியோரிடம் போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் இறுதியில் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
3 பேரும் பின்னர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications