சங்கர மட தொடர்பு: சொர்ணமால்யாவுக்கு போலீஸ் சம்மன்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Swarnamalyaசங்கர மடத்துடனான தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக நேரில் வருமாறு காஞ்சிபுரம் போலீஸார் நடிகை சொர்ணமால்யாவுக்குசம்மன் அனுப்பியுள்ளனர்.

ஜெயேந்திரர் உள்ளிட்ட சங்கர மடத்தைச் சேர்ந்த பலருக்கும் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில்தெரிய வந்தததையடுத்து அந்தப் பெண்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் உஷா முதலில் விசாரிக்கப்பட்டார். அதன் பின்னர் ஜெயேந்திரர் மீது புகார் கூறிய அனுராதா ரமணன், விஜயேந்திரர்கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்ததாகக் கூறப்படும் சென்னை பெண் அனுராதா உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.

இந் நிலையில் சங்கர மடத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படும் நடிகை சொர்ணமால்யாவிடம் போலீஸார் விசாரணைநடத்தவுள்ளனர். சொர்ணமால்யாவுக்கும், அவரது கணவர் அர்ஜூனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது காண்டிராக்டர் ரவிசுப்ரமணியத்திடம் இதுகுறித்துக் கூறியுள்ளார் சொர்ணமால்யா. இதையடுத்து அவர் சங்கர மடத்திற்குஇப்பிரச்சினையை கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரும் பிரிந்து விடுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அர்ஜூன், சொர்ணமால்யாவை விட்டுப் பிரிந்து விட்டார். அதன் பின்னர் ரவிசுப்ரமணியத்துடன் சொர்ணமால்யாமிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். சொர்ணமால்யாவுக்காக புதிய வீடு ஒன்றையும் ரவிசுப்ரமணியம் வாங்கிக் கொடுத்துள்ளதாகத்தெரிகிறது.

மேலும், ரவிசுப்ரமணியம் பலமுறை சங்கர மடத்திற்கு சொர்ணமால்யாவை அழைத்துச் சென்றுள்ளார். இவை அனைத்தும் போலீஸ்காதுகளுக்கு எட்டியுள்ளது. மேலும் சொர்ணமால்யா சங்கர மடம் வந்து சென்றது குறித்த ஆதாரங்களையும் போலீஸார் திரட்டியுள்ளனர்.

இதையடுத்து அவரை விசாரிக்க காஞ்சிபுரம் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதனால் அவரை விசாரணைக்கு வருமாறு கூறிகாஞ்சிபுரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திர மாநிலம் ஜெயலட்சுமி உள்ளிட்ட சங்கர மடத்திற்கு அடிக்கடி வந்து போனதாக கூறப்படும் 6பெண்கள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+