ஜெட்டா: யுஎஸ் தூதரகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
ஜெட்டா:
செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியர்கள், சூடான் நாட்டவர்கள் உள்ளிட்ட சிலரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் செளதி கமாண்டோ படையைச் சேர்ந்த 4 பேரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தூதரகத்தில் இருந்தஅமெரிக்கர்கள் யாரும் பலியாகவில்லை. முன்னதாக இவர்களை தீவிரவாதிகள் சிறை பிடித்ததாக தகவல்கள் வந்தன. அதை பின்னர்தூதரகம் மறுத்துவிட்டது.
ஆனால், மேலும் இரு தீவிரவாதிகள் உள்ளே இருப்பதாகவும் அவர்களது பிடியில் சில இந்தியர்களும் சூடான் நாட்டவர்களும்சிக்கியிருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தச் செய்தியை செளதி அரசு உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
முன்னதாக இன்று பிற்பகலில் தூதரகத்தின் அருகே பலத்த குண்டு வெடிப்புச் சத்தமும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் சுடும் சத்தமும்கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் தீவிரவாதிகள் தூதரகத்துக்குள் புகுந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த செளதி கமாண்டோ படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டைநடந்தது. தூதரக வளாகத்துக்குள் இருந்து நெடுநேரம் தொடர்ந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டவண்ணம் இருந்தது.
ஹெலிகாப்டர்களில் வந்த கமாண்டோக்களும் தீவிரவாதிகளை வான்வெளியில் இருந்து தாக்கினர். துப்பாக்கிச் சூடு காரணமாகதூதரகத்தின் ஒரு பகுதியில் தீப் பிடித்துக் கொண்டது.
மேலும் இரு தீவிரவாதிகள் தூதரக வளாகத்துக்குள் பிணைக் கைதிகளுடன் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்திய நேரப்படிமாலை 6.45 மணி வரை துப்பாக்கிச் சண்டை நீடித்துக் கொண்டிருந்தது.
தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கரோல் காலின் கூறுகையில், இச் சம்பவத்தையடுத்து ரியாதிலும், தரன் நகரிலும் உள்ள அமெரிக்கத்தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன. செளதியில் உள்ள பெரும்பாலான தூதரக ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்பஉத்தரவிடப்பட்டுள்ளது. செளதிக்கு வர வேண்டாம் என்றும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
செளதியில் 2003ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரை 90 பேர் வரை அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதலில் பலியாகியுள்ளனர்என்பது நினைவுகூறத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications