எஸ்பியால் ஜெயேந்திரருக்கு பெரும் ஆபத்து: கலாமிடம் புகார்
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயேந்திரருக்கு குளுகோமா வியாதிக்கான மருந்துகள் வழங்கப்படவில்லை என்றும் அவரைக்கொல்ல சதி நடக்கிறது என்றும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர்களில் ஒருவரான கிருஷ்ணசாமி தந்திஅனுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான கிருஷ்ணமணி அனுப்பிய தந்தியில் கூறியிருப்பதாவது:-
ஜெயேந்திரர் குளுகோமா மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல கண் மருத்துவர் பத்ரிநாத் குளுகோமாவியாதிக்காக ஜெயேந்திரருக்கு சில மருந்துகளை சாப்பிட சொல்லியிருக்கிறார். ஆனால் கடந்த 3 தினங்களாக அந்த மருந்துகள் சிறையில்அவருக்கு வழங்கப்படவில்லை.
இந்த வழக்கை விசாரித்து வரும் பிரேம்குமார் ஆபத்தானவர். ஏற்கனவே 2 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். பொய் சாட்சி சொல்லவேண்டும் என்று காவலில் இருந்தவரை துன்புறுத்தியிருக்கிறார்.
அவர் தான் கொண்டு வந்த பாலை குடிக்கும்படி ஜெயேந்திரரை வற்புறுத்தியுள்ளார். அதில் போதை மருந்தோ அல்லது விஷமோ கலந்துஜெயேந்திரரை திட்டமிட்டிருக்கலாம் என்று ஜெயேந்திரரின் பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜெயேந்திரரின் தனி மருத்துவர் ராமசந்திரன் வேலூர் சிறைக்கு சென்றிருந்த போது ரத்த அழுத்த பரிசோதனை கருவி மற்றும் சர்க்கரைஅளவை கண்டறியும் கருவி ஆகியவற்றைக் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
கடந்த 2 நாட்களாக ஜெயேந்திரரை அவரது வழக்கறிஞர் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை.
ஜெயேந்திரருக்கு உரிய மருந்துகள் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவர் மயக்க நிலைக்குச் செல்லக்கூடிய வாய்ப்புஉருவாகும்.
ஜெயேந்திரரின் உடல்நிலை குறித்து பலர் என்னிடம் தொலைபேசியில் அச்சம் தெரிவித்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சிகள்இல்லாததால் ஜெயேந்திரது உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. எனவே அவர் உயிரைக் காப்பாற்ற குடியரசுத் தலைவர்உடனே இப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜெயேந்திரர் சோர்வு:
இந் நிலையில், வேலூர் சிறையில் ஜெயேந்திரரை இன்று அவரது சகோதரர் விஸ்வநாதனும், மருமகன் சங்கரும் சந்தித்து பேசினர் . பின்னர்நிருபர்களிடம் பேசிய விஸ்வநாதன், ஜெயேந்திரர் சோர்வாக இருப்பதாகத் தெரிவித்தார் .
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications