உஷா பற்றி காளகஸ்தி மேலாளர் மனம் திறப்பு
பள்ளிப்பட்டு:
ஸ்ரீரங்கம் உஷாவும் அவரது கணவர் நாராயணனும் பணவெறி பிடித்தவர்கள் என்று காளகஸ்தி முதியோர் இல்ல மேலாளர்ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஸ்ரீரங்கம் உஷாவுக்கு ஜெயேந்திரர் பண உதவி செய்ததாகவும், உஷா ஆந்திராவில் உள்ள வங்கியில் பண மோசடி செய்ததாகவும் செய்திவெளியானது. இந்த மோசடி குறித்து தகவல் வெளியானதும், காளகஸ்தியில் உள்ள முதியோர் இல்ல மேலாளர் ராதா கிருஷ்ணன்தலைமறைவானார்.
இந் நிலையில் ராதாகிருஷ்ணன் முதியோர் இல்லத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
உஷாவின் கணவர் நாராயணன் யாரையும் நம்பமாட்டார். பணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். பேச்சு திறமை உடையவர்.அதன் மூலமாகத் தான், எனது தந்தைக்கு நண்பரானார். அப்படித்தான் வங்கியில் ரூ.32 லட்சம் கடன் வாங்கினார்.
உஷாவுக்கும் நாராயணனுக்கும் என் தந்தைதான் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது தான் நாராயணன் எனது தந்தைக்கு வீட்டு நிலம்கொடுத்தார். ஆனால் நிலத்திற்குரிய பணத்தை நாராயணனுக்கு என் தந்தை கொடுத்து விட்டார்.
நான் வசிக்கும் பெரிய வீட்டை வங்கியில் கடன் வாங்கித் தான் கட்டின்ே. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
உஷா, நாராயணன் ஆகியோரின் மோசடி செய்தி வெளியானவுடன் போலீஸார் என்னிடம் விசாரணை நடத்தியது உண்மைதான். ஆனால்நான் தலைமறைவாகவில்லை. உடல் நிலை சரியில்லாததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.
உஷாவும் நாராயணனும் காளகஸ்தியில் இருந்த போது வங்கியில் ரூ.30 லட்சம் மோசடி செய்தது பற்றி வங்கி மேலாளர் கோபிநாத்இங்குள்ள சங்கரமட ஆசிரமத்திற்கு வந்தபோதுதான் தெரியும்.
அதுவரை அவர்கள் இவ்வளவு பயங்கரமான மோசடி பேர்வழிகளாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பண வெறிபிடித்தவர்கள் என்பது மட்டும் தெரியும்.
இந்த முதியோர் ஆசிரமம் காஞ்சி சங்கர மடத்தால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டிருப்பது பற்றி நான் எதுவும் சொல்லக்கூடாது என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications