ஜெ. நாளை தென் மாவட்ட பயணம்
ஆண்டிப்பட்டி:
| தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அதி நவீன அரசு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போதே, தனது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மருத்துவக் கல்லூரியும்,மருத்துவமனையும் அமைப்பதாக வாக்குறுதி தந்திருந்தார் ஜெயலலிதா. தற்போது அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். |
ஆண்டிப்பட்டி-தேனி மெயின் ரோட்டில் உள்ள மேல் மங்கலம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கும், மருத்துவக்கல்லூரிக்கும் கடந்த 2002ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா.
45 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளன. 300 படுக்கைகள் கொண்டதாகமருத்துவமனை அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ. 27.39 கோடி மதிப்பில் மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை நடக்கும்விழாவில் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் ஜெயலலிதா.
இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் ஜெயலலிதாவுக்காக சிறப்பு ஹெலிபேட்அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் இடத்தில் பிரமாண்டமான பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை சிறப்பு விமானத்தில் மதுரை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஆண்டிப்பட்டி செல்லும் ஜெயலலிதா காலை 11.30மணியளவில் மருத்துமனையைத் திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஆண்டிப்பட்டி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 12.30 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார் ஜெயலலிதா.
| அங்கு அனல் மின் நிலையத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்கிறார். இதற்காக துறைமுக மேல்நிலையப் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட்அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நெல்லை மாவட்டம் செட்டிக் குளத்தில் ரூ. 12 கோடியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் தயாரிப்புத் திட்டத்தைஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். ஜெயலலிதாவின் இந்த தென் மாவட்ட சுற்றுப் பயணத்தையொட்டி மதுரை, தேனி, தூத்துக்குடி, நெல்லையில் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. |
|
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை














Click it and Unblock the Notifications