தாகி கொலை வழக்கு விசாரணைக்கு தடை
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை தொடர்ந்து விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
திமுக கோஷ்டிப் பூசலில் வெட்டிக் கொல்லப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந் நிலையில் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி தா.கிருட்டிணன் சகோதரர் ராமையா மதுரை உயர்நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், எனது சகோதரர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி, எஸ்ஸார் கோபி, மன்னன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கை விசாரித்து வரும் அண்ணா நகர் போலீஸார் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி குற்றப் பத்திரிக்கையை தாக்கல்செய்தனர்.
மு.க.அழகிரி முன்னாள் முதல்வரின் மகன், திமுகவைச் சேர்ந்தவர். எனது சகோதரரும் திமுக சார்பில் மாநில அமைச்சராகவும், எம்.பியாகவும்இருந்தவர். தற்போது திமுகவைச் சேர்ந்த பலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
வழக்கை விசாரித்து வரும் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஜபருல்லாகானும், திமுகவைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை இணை அமைச்சர்வேங்கடபதியும் வழக்கறிஞர்களாக இருந்தபோதே நெருங்கிய நண்பர்களாவர். இவர்கள் இணைந்து பணியாறியுள்ளனர்.
வேங்கடபதி அமைச்சரானதும் அவரை நீதிபதி ஜபருல்லாகான் சந்தித்தார். அதன் பின்னர் வழக்கின் போக்கே மாறியுள்ளது. எதிர்த்தரப்பினர் விருப்பத்துக்கேற்ப வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை விசாரணையின்போதும் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் 50க்கும் மேற்பட்டோர் கோர்ட்டுக்கு வருகிறார்கள். அவர்களை நீதிபதி கட்டுப்படுத்துவதில்லை.
எனவே நீதிபதி ஜபருல்லா கான் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ராமையா.
மனுவை விசாத்த நீதிபதி சிங்காரவேலு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒருவாரத்திற்கு தள்ளி வைத்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications