மக்களை திசை திருப்பவே ஜெயேந்திரர் கைது: பண்டாரு
மதுரை
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் திமுக கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்ததால், மக்களை திசைதிருப்பும் விதத்திலேயே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் பண்டாருதத்தாத்ரேயா கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணிக்குசெல்வாக்கு அதிகரித்துள்ளது. அந்தக் கூட்டணியின் செயல்பாடுகளும் மக்களை கவர்ந்துள்ளது.
எனவே மக்களை திசை திருப்பும் விதமாகவே அதிமுக அரசால் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜெயேந்திரருக்கும், சங்கரராமன் கொலைக்கும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக முதலில் அரசு கூறியது. ஆனால்இப்போது பழைய வழக்குகளைத் தோண்டியெடுத்து அதை ஜெயேந்திரர் மீது போட்டு வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிர்ப்பந்தம் காரணமாகவே அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க நேர்ந்தது.
வரும் 13ம் தேதி ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரியும், போலி மதச்சார்பின்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் வரும் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தப்படும். அன்றைய தினம் பேரணி நடத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு தரப்படும்.
ஜெயேந்திரர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. அவரை தீபாவளி நாளன்றுகைது செய்ததுதான் தவறு என்கிறோம் என்றார் பண்டாரு தத்தாத்ரேயா.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications