அப்புவுக்கு ஆப்பு!
சென்னை:
அப்புவைப் பிடிக்க என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
தாதா வீரமணியை அவனது வட சென்னை கோட்டையில் வைத்துப் போட்டுத் தள்ளிய வெள்ளைதுரை, பின்னர் வீரப்பனை வதம்செய்ததிலும் மிக முக்கிய பங்கு வகித்தவர். வீரப்பனை காட்டில் இருந்து ஆம்புலன்சில் ரோட்டுக்குக் கூட்டி வந்து கதையை முடித்தவர்.
இப்போது இந்த வெள்ளைதுரை வசம் அப்பு விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மும்பை, ஆந்திரா, டெல்லி என கண்ணாமூச்சி காட்டி வரும் அப்புவை சரணடையச் சொல்லி க்யூ பிராஞ்ச் போலீசார் தங்களதுகாண்டாக்ட்கள் மூலம் அப்புவுக்கும் ரவி சுப்பிரமணியத்துக்கும் பல வகைகளிலும் செய்தி அனுப்பியும் கூட இந்த இருவரும் இன்னும்மசியவில்லை.
சரணடைகிறேன் என்று போலீசை வரச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து இருவரும் எஸ்கேப் ஆகி வருகிறார்கள். கடந்த வாரம்டெல்லி போய்விட்டு ஸ்பெஷல் டீம் வெறும் கையோடு திரும்பியது கூட அப்புவால் ஏமாற்றப்பட்டுத் தான்.
இதையடுத்து அப்பு மற்றும் ரவியிடம் இனியும் குழைவது எல்லாம் சரியாக வராது என காவல்துறை முடிவு செய்துள்ளது.
வெள்ளைதுரையை களமிறக்கிவிடலாம் என அரசுக்கு உளவுப்பிரிவு தலைவர் அலெக்ஸாண்டர் ஆலோசனை தந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பிரேம்குமார் மற்றும் அதிரடிப்படை டிஜிபி விஜய்குமாருடனும் அலெக்ஸாண்டர் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அதிரடிப்படையில் இருந்து டிஎஸ்பி வெள்ளைதுரை ரிலீவ் செய்யப்பட்டு தமிழக போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
இதையடுத்து வெள்ளைதுரை தலைமையில் ஒரு படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அப்பு, ரவியை அமுக்க 4 படைகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வீரமணி, வீரப்பனுக்கு முன் திருச்சியில் ரெளடிகள் பிச்சமுத்து, கோலிஜென் ஆகியோரை வெள்ளைதுரை என்கெளண்டரில் போட்டுத்தள்ளியது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைதுரைக்கு ராசியான போலீஸ்காரர் என்ற பெயர் காவல்துறையில் உண்டு. வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டு விவகாரங்களில்வெள்ளைதுரை நுழைந்தால் விஷயம் ஒரு வழியாய் முடிவுக்கு வருவது உண்டு.
வெள்ளைதுரை ரூபத்தில் அப்புவை சனி விரட்டப் போகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications