ஆடிட்டர்: ஜெயேந்திரரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது.
ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று காலை தீர்ப்புவழங்கப்படுவதாக இருந்தது.
ஆனால், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 437, 439வது பிரிவுகளை முன் வைத்த நீதிபதி முருகேசன், அது தொடர்பாக தங்கள்தரப்பு வாதங்களை எடுத்து வைக்குமாறு அரசு மற்றும் ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த மனு மீது இன்றும் விசாரணை நடந்தது. அப்போது ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்யநாராயணாகூறுகையில்,
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 437, 439வது பிரிவுகள் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்குக்கு பொருந்தாது. எனவேஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்குவதற்கு இந்த சட்டப் பிரிவுகள் தடையே இல்லை என்றார்.
ஆனால் இதை மறுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் துரைசாமி வாதிடுகையில், கொலை முயற்சிக்கும் இந்த சட்டப் பிவுகளின் சாராம்சம்பொருந்தும். எனவே ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்க கூடாது.
மேலும், அப்பு, ரவிசுப்ரமணியம் ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே இந் நிலையில் ஜெயேந்திரர் ஜாமீனில் வெளியேவிடுவிக்கப்பட்டால் சாட்சிகள் கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முருகேசன் மாலையில் தீர்ப்பை வழங்கினார். அப்போது சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனுவைதள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications