மணல் திருட்டை தடுக்க முயன்ற துணை தாசில்தார் லாரி ஏற்றி கொலை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே மணல் திருட்டைத் தடுக்க முயன்ற துணை தாசில்தார் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாகஅதிமுக பிரமுகரான லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாசில்தார் மனோகரன் தலைமையிலான ஒரு குழு இன்று அதிகாலைபாலாற்றங்கரைப் பகுதிகளில் மணல் திருட்டைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். முதலில் ஒரு லாரியைப்பிடித்தனர்.
அதிகாரிகளைப் பார்த்ததும் லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார். பின்பு அந்த லாரி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அதனையடுத்து ஒரு லாரி வேகமாக வந்தது. அதிகாரிகளைப் பார்த்ததும் லாரி ஓட்டுநர் வண்டியை பின்னோக்கி ஓட்டி தப்பிக்கப்பார்த்தார். உடனே லாரியை நோக்கி துணை தாசில்தார் ஆறுமுகம் விரைந்து சென்றார்.
லாரியின் கதவைத் திறந்து ஒட்டுநரைப் பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் ஆறுமுகத்தைக் கீழே தள்ளிஅவர் மீது வண்டியை ஓட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
அவரை கொன்று விட்டுத் தப்பிய லாரி டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த லாரிக்கு உரிமையாளர் ஒரு அதிமுகபிரமுகர் என்பது தெரிந்து போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்புதான் இதே செங்கல்பட்டு மாவட்டத்தில் மணல் திருட்டைத் தடுக்க முயன்ற தாசில்தார் லாரி ஏற்றிக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துக்கு ரூ. 5லட்சம்: ஜெ.
இந் நிலையில் துணை தாசில்தார் ஆறுமுகத்தின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தர முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், துணை வட்டாட்சியர் ஆறுமுகம் திருட்டு மணல் லாரியைப் பிடிக்கமுயன்று பலியான தகவல் மிகுந்த துயரத்தை கொடுத்துள்ளது.
அவரை இழந்து வாடும் ஆறுமுகத்தின் மனைவி, குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது கடமையுணர்வையும், அச்சமில்லாமல் துணிச்சலுடன் தனது பணியை செய்ய முயன்றமைக்காகவும் அவரதுகுடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications