நடிகைகள் தொடர்பு: ரகுவிடம் போலீஸ் "துருவல்"!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Raghuசங்கரராமன் கொலை தொடர்பாகவும், சங்கர மடத்தின் கல்வி நிலையங்கள் விடுதிகளில் நடந்த மர்மச் சாவுகள், மடத்துடனானநடிகைகள், பெண் தொடர்புகள் ஆகியவை குறித்து இளையவரான விஜயேந்திரரின் தம்பி ரகுவிடம் நேற்றிரவு நெடுநேரம் வரைபோலீசார் விசாரணை நடத்தினர். இன்று இரவும் அவரிடம் விசாரணை நடக்கவுள்ளது.

(ரகுவிடம் விசாரணை நடக்கவுள்ளது என்பதை நேற்று காலையே நாம் சொல்லியிருந்தோம்)

நேற்று இரவில் சங்கர மடத்துக்கு வந்த போலீசார் ரகுவை அழைத்துக் கொண்டு விசாரணை நடக்கும் பங்களாவுக்குக் கூட்டிச்சென்றனர்.

அங்கு சுமார் 3 மணி நேரம் ரகுவிடம் எஸ்.பி. பிரேம்குமார் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் இரவு1.30 மணிக்கு இறுகிய முகத்துடன் ரகு மடத்துக்குத் திரும்பினார். இன்றும் விசாரணைக்காக இரவு 7 மணிக்கு ஆஜராகுமாறுஅவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரகுவின் வழக்கறிஞர் சண்முகம் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

சங்கர மடத்துக்கு வந்து செல்பவர்கள், தொலைபேசியில் வழக்கமாக பேசுபவர்கள், அப்பு, ரவி சுப்பிரமணியம் ஆகியோர் குறித்துரகுவிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.

மேலும் சங்கர மடத்துக்கு வந்து சென்ற நடிகைகள் குறித்தும் கேட்டுள்ளனர். நடிகைகள் வந்து போனது குறித்து தனக்கு ஏதும்தெரியாது என்று ரகு பதில் தந்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சத்திரத்தில் நடந்த விழாவுக்கு மட்டும் சொர்ணமால்யாவந்து போனார் என்பதை மட்டும் போலீசிடம் ரகு தெரிவித்தார் என்றார்.

ஆனால், ரகுவின் பதில்கள் போலீசாருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இன்றைய விசாரணையின்போதுஅவரிடம் போலீசார் ஆதாரங்களை எடுத்து வைத்து கிடுக்கிப்பிடி போடவுள்ளதாகத் தெரிகிறது.

விசாரணையின் முடிவில் ரகு கைது செய்யப்படலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மடத்தின் பெண் விவகாரங்களில் முக்கியமாக அடிபடும் பெயரே ரகுவுடையது தான். மடத்தில் இவரது நாட்டாமை ஆரம்பித்தபிறகே எல்லா கெட்ட விஷயங்களும் மடத்துக்குள் வந்ததாக சங்கர மடத்தின் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும்பலரும் கூறுகின்றனர்.

சங்கர மடம் நடத்தும் கல்வி நிலையங்களின் பெண்கள் விடுதிகளில் ரகுவின் ஆட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தவிடுதிகளில் ரகுவுக்கு தனி ரூம் தரப்பட்டுள்ளது.

ரெளடிகளுடன் அதிக சவகாசம் வைத்திருந்த ரகுவால் பாதிக்கப்பட்டவர்களில் பல அக்ரஹாரத்துப் பெண்களும் அடக்கம் என்றுபோலீஸ் நம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+