வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி

Subscribe to Oneindia Tamil

டாக்கா:

Irfan Pathanவங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திவந்தனர்.

டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தது. பதானின் அபார பந்து வீச்சில் (5 விக்கெட்கள்) வங்கதேச வீரர்கள்அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்க்ஸில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் வங்கதேசம் இழந்தது.

அடுத்து ஆடிய இந்தியா 526 ரன்கள் குவித்தது. இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 248 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல்இருந்தார். இவருக்கு அடுத்ததாக ஜாகீர்கான் 75 ரன்களும், கங்குலி 71 ரன்களும் எடுத்தனர்.

342 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸைத் துவக்கிய வங்கதேசம், மீண்டும் பதானின் பந்துவீச்சில் சிக்கித்தடுமாறியது. முன்வரிசை ஆட்டக்காரர்கள் 5 பேரை பதான் அடுத்தடுத்து அவுட்டாக்க இந்தியாவின் வெற்றி உறுதியானது.

இறுதியில் 202 ரன்களுக்கு வங்கதேசம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசி மொத்தம் 10 விக்கெட்களை சாய்த்தபதான் சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்றார்.

போட்டியின் சாதனைகள்:

இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் 3 சாதனைகளை நிகழ்த்தினர்.

முதல் இன்னிங்க்ஸில் இரண்டு விக்கெட்களை எடுத்த கும்ப்ளே, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்தியர் என்றகபில்தேவின் (434 விக்கெட்கள்) சாதனையை முறியடித்தார்.

சச்சின் சதமடித்தபோது டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற கவாஸ்கரின் சாதனையை (34 சதங்கள்) சமன் செய்தார்.

10வது ஆட்டக்காரராக 1972-73ல் நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் காலிங்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 68 ரன் எடுத்ததே இதுவரை உலகசாதனையாக இருந்தது. அதை ஜாகீர்கான் 75 ரன்கள் எடுத்ததன் மூலம் முறியடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+