ஹாக்கியில் தொடர் தோல்வி: இந்திய கோச் நீக்கம்
லாகூர்:
ஹாக்கியில் இந்தியா தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதையொட்டி அதன் பயிற்சியாளரை நீக்க இந்திய சம்மேளனம் முடிவுசெய்துள்ளது.
26வது சாம்பியன் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஹாலந்தை 4-2என்ற கோல் கணக்கில் தோல்வி அடையச் செய்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியஉற்சாகத்துடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இதில் பாகிஸ்தான் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதனால் இந்திய அணி போட்டித்தொடரில் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
5வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
இந்திய பயிற்சியாளர் நீக்கம்:
இந்திய அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதையொட்டி அணியின் பயிற்சியாளர் ஜெர்ஹர்ட் ராச்சை (ஜெர்மன்) நீக்க இந்தியஹாக்கி சம்மேளனம் முடிவெடுத்துள்ளது.
இத் தகவலை ஹாக்கி சம்மேளன பொதுச் செயலாளர் ஜோதி குமரன் தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாக ராச் கூறியுள்ளார்.இதனையடுத்து ராச் ஹாக்கி சம்மேளன தலைவர் கே.பி.எஸ். கில்லை நாளை சந்திக்கிறார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications