அப்புவின் காதலியான பெண் டாக்டரிடம் விசாரணை
சென்னை:
அப்புவின் காதலியான பெண் டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இரண்டு பொண்டாட்டிக்காரரரான தாதா அப்புவுக்கு டாக்டர் அனுராதா என்ற கள்ளக் காதலியும் உள்ளார்.
தலைமறைவாக உள்ள அப்புவை தங்களது பிடிக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ள போலீசார் இப்போதுஅவனது குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்துக்கு நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளனர்.
அப்புவின் தாயார் ஆதிலட்சுமியிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அப்புவின் தங்கை ஜமுனாவிடமும் விசாரணைநடத்தினர். சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ஜமுனாவின் கணவர் மணலி பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இவரைத் தவிர கரூரில் வசிக்கும் இன்னொரு சகோதரியிடமும் போலீஸார் விசாரணை நடத்துவர் என்று தெரிகிறது.
அதே போல சென்னை திருவெற்றியூரில் உள்ள டாக்டர் அனுராதா என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.இவர் அப்புவின் நெருங்கிய தோழி-கம்-காதலியாவார்.
அப்புவின் முதல் மனைவியான நிர்மலாவும் தலைமறைவாகவே இருந்து வருகிறார். இதே போல அமெரிக்காவில் படிக்கும்அப்புவின் மகனிடமும் போலீசார் தொலைபேசியில் பேசினர். தன்னை தந்தை தொடர்பு கொண்டு ஒரு மாதத்துக்கும் மேலாவதாகஅவர் கூறிவிட்டார்.
அப்புவின் இரவண்டாவது மகன் சென்னை கல்லூரியில் படித்து வந்தார். இப்போது இவரும் தலைமறைவாகவே இருக்கிறார்.
ரவி சுப்பிரமணியம்:
அப்புவுக்கு இரண்டு மனைவிகள் ஒரு காதலி ஆகியோர் இருக்கும் நிலையில் ரவி சுப்பிரமணியத்துக்கு காதலிகள் மட்டும் 5 பேர்உள்ளது தெரியவந்துள்ளது.
ஹார்லிக்ஸ் ஷியாமளா உள்பட இந்த 5 பேரிடமும் போலீசார் ஒரு ரவுண்டு விசாரித்து முடித்துவிட்டனர். ஆனாலும் ரவியையும்அப்புவையும் பிடிக்குள் கொண்டு வர முடியவில்லை.
எஸ்பிக்கள் பிரேம்குமார், எஸ்பி வரதராஜுலு, டிஎஸ்பிக்கள் ராஜ்குமார், ராஜாமணி, இன்ஸ்பெக்டர்கள் சரஸ்வதி, சீனிவாசன்ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகளும், வெள்ளை துரை தலைமையில் ஒரு மிக ரகசியமான டீமும் அப்பு, ரவி தேடுதல்வேட்டையில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறது.
உளவுப் பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீசாரிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து ஆந்திரா, கர்நாடகம், மும்பை,டெல்லி என பல்வேறு பகுதிகளுக்கும் இந்தப் படைகள் பறந்து கொண்டிருக்கின்றன.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications