சேது சமுத்திரம்: திட்டத்தை எதிர்க்கும் வழக்கில் திங்களன்று தீர்ப்பு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்தும், அதை விரைவாக அமல்படுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களின் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் பொது மக்கள் கருத்தறியும் கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரியும் கடலோர பாதுகாப்புக் குழுவின்தலைவர் ஓ.பெர்னாண்டஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதே போல சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி தூத்துக்குடி துறைமுகப்பொறுப்புக் கழகம் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த இரு ரிட் மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதிஎன்.வி.பாலசுப்ரமணியம் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
இதில் இறுதிக் கட்ட வாதம் முடிவடைந்ததையடுத்து இரு மனுக்கள் மீதும் வரும் திங்கள்கிழமை தீர்ப்புவழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.


Click it and Unblock the Notifications
