ரெயில்- வேன் மோதல்: 4 ஐயப்ப பக்தர்கள் பலி
விழுப்புரம்:
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வேன் மீது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் வேனில் பயணம் செய்த 4 ஐயப்ப பக்தர்கள்பலியானர்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் அருகே சாமியாடிகுச்சிபாளையத்தில் ஆளில்லாத ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்றுஅதிகாலை 5.30 மணிக்கு நெருங்கியபோது, வேன் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
அப்போது வேன் மீது ரயில் மோதியது. இதில் வேன் நொறுங்கியது. அதோடு வேனின் ஒரு பகுதி 1 கி.மீ. தொலைவிற்கு இழுத்துச்செல்லப்பட்டது.
சாமியாடிகுச்சிப்பாளைத்தைச் சேர்ந்த பழனி (40), நைனார்பாளையத்தைச் சேர்ந்த பிரசாந்த் (13), பாண்டிச்சேரியைச் சேர்ந்த டிரைவர்சீனிவாசன் (25) ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். ஜனார்த்தனன் (35) என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்வழியில் இறந்தார்.
பழனியின் இரண்டு குழந்தைகள் வெங்கடேசன் (12), வனஜா (11), சக்திவேல் (30), அவரது தம்பி ஜெயவேல் (23), சுந்தரபாண்டியன்(35), புண்ணியகோடி (35), பிரபு (22), பாலகுரு (24), பிரகாஷ் (10), அரி (25) ஆகிய 10 பேர் விபத்தில் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் வானூர் அருகே உள்ள நைனார்பாளையத்தைச் சேர்ந்தவர்கள். சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது,இந்த விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்தவர்களுக்கு விழுப்புரம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications