எச்.ராஜா மீது பாய்ந்தது வழக்கு
காரைக்குடி:
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மத உணர்வைத் தூண்டும் விதமாக பேசியதாகக் கூறி பாஜக மாநில பொதுச் செயலாளர் எச்.ராஜாமீது காரைக்குடி போலீஸார் திடீரென வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் அதி தீவிரமாக அரசுக்கு எதிர்ப்பு காட்டி வரும் முக்கியஸ்தர்களில்ராஜாவும் ஒருவர். பா.ஜ.க தனது எதிர்ப்பை அடக்கியே வாசித்து வந்தாலும் ராஜா வேகம் காட்டி வருகிறார்.
அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதனால் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று அரசை கன்னாபின்னா பாணியில் திட்டி வருகிறார் ராஜா.(அதிமுக அரசை 5 நிமிடம் திட்டிப் பேசிவிட்டு திமுகவையும் சோனியா காந்தியையும் அரை மணி திட்டுவார் என்பது தனிக் கதை).
இதையடுத்து ராஜாவை அடக்குமாறு கோட்டையில் இருந்து போலீசாருக்கு உத்தரவு போய்ச் சேர்ந்துள்ளது. காரைக்குடி போலீசார்தங்களது பைல்களில் நுழைந்து, தேடிக் குடைந்து ராஜாவுக்கு எதிராக ஒரு புகாரை கையில் எடுத்துவிட்டனர்.
வழக்கமாகவே மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் தான் ராஜா பேசுவார். ஆனால், அதை வழக்காக போலீசார் பதிவு செய்ததில்லை.
இந் நிலையில் காரைக்குடியில கடந்த செப்டம்பர் 20ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த விநாயகர் சிலை ஊர்வல ஊர்வலத்தில்மாற்று மதங்களை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி, மதக் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக ராஜா மீது உளவுப் பிரிவு போலீசாரைவைத்தே ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர் போலீசார்.
காரைக்குடி காவல் நிலைய உளவுப் பிரிவு போலீஸ்காரர் பெருமாள் இந்தப் புகாரைக் கொடுக்க, அதையே வழக்காகப் பதிவு செய்துள்ளனர்போலீசார்.
ராஜாவின் போக்கில் மாற்றம் இல்லாவிட்டால் ஒரு நல்ல வெள்ளிக்கிழமை ராத்திரியாகப் பார்த்து அவர் உள்ளே தள்ளப்படவும்வாய்ப்பிருப்பதாக போலீசாரிடம் பேசியபோது புரிந்தது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications