சொத்து வழக்கு: கெளடா மூலம் காய் நகர்த்தும் ஜெ
பெங்களூர்:
தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு முன்னாள் பிரதமர் தேவே கெளடா மூலம் முட்டுக்கட்டை போட முதல்வர்ஜெயலலிதா முயன்று வருவதாக செய்திகள் வருகின்றன.
கர்நாடகத்தில் கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. 6 மாத கால நீண்டஇழுபறிக்குப் பின் நேற்று தான் அமைச்சரவையை விரிவாக்கினார் முதல்வர் தரம்சிங்.
புதிதாக 20 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் இப்போது அமைச்சரவையில் கெளடாவின் கட்சிக்கு 17 இடங்களும் காங்கிரஸ்அமைச்சர்கள் 15 பேரும் உள்ளனர்.
இந்தப் புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதில் பெரும் மோதல் நடந்து வருகிறது. சட்டம் மற்றும் உள்துறையைக் கேட்டுகாங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி தந்து வருகிறார் கெளடா.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான கெளடா வரும்படி வரும் துறைகளை விட்டுவிட்டு சட்டத்துறையைக் கேட்பது அரசியல்புருவங்களை உயரச் செய்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் நடக்கவுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தமிழகத்தில் நடத்தப்பட்ட அழகைப் பார்த்து கோபமடைந்த உச்ச நீதிமன்றம் இதை கர்நாடகத்துக்கு மாற்றியது.ஆனால், ஆவணங்கள் மொழி பெயர்ப்பு, தனி நீதிமன்றம் அமைப்பு, நீதிபதி நியமனம், வழக்கறிஞர்கள் நியமனம் என அனைத்தும் சேர்ந்துவிசாரணை ஆரம்பிப்பது பல மாதங்களாக தள்ளிப் போய்விட்டது.
இப்போது ஒரு வழியாய் ஆவணங்கள் மொழி பெயர்ப்பு முடியப் போகிறது. அடுத்த மாதம் விசாரணையைத் தொடங்கி தினந்தோறும்விசாரித்து தீர்ப்பை வழங்கப் போவதாக இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட பச்சேபுரா கடந்த வாரத்தில்அறிவித்தார்.
இந் நிலையில் இந்த விசாரணைகளுக்கு அரசியல்ரீதியில் இடைஞ்சல் தர கெளடா மூலமாக ஜெயலலிதா காய் நகர்த்துவதாகக்கூறப்படுகிறது. கடந்த பல மாதங்களில் ஜெயலலிதாவை கெளடாவின் மகன் சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டத்துறையைப் பெற்றுவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு அரசு வழக்கறிஞரை நியமிப்பதைதாமதப்படுத்தவோ அல்லது தங்களுக்கு சாதகமான ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கவோ கெளடாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தபோது அரசு வழக்கறிஞர் கிட்டத்தட்ட முதல்வர்ஜெயலலிதா-சசிகலாவின் வழக்கறிஞர் மாதிரித் தான் நடந்து கொண்டார். இதனால் தான் வழக்கின் போக்கு ஜெயலலிதாவுக்கு சாதகமாகதிசை மாறியது.
இதனால் தான் தமிழகத்தில் நீதித்துறையில் அரசின் தலையீடு இருப்பதாகக் கூறி, கண்டித்து வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம். இந் நிலையில் கெளடா மூலமாக வழக்கு விசாரணைகளில் தலையிட ஜெயலலிதா தரப்பு முயல்வதாகக் கூறப்படுகிறது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications