போலி சாமியார் சதுர்வேதி குண்டர் சட்டத்தில் கைது!!
சென்னை:
செக்ஸ் புகார், மோசடிப் புகாரில் சிக்கியுள்ள சாமியார் சதுர்வேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த சாமியார் சதுர்வேதி சென்னை தி.நகரில் ஆசிரமம் வைத்திருந்தார். இந்த ஆசிரமம் அமைக்க வீடு கொடுத்து உதவியதொழிலதிபர் சுரேஷ் என்பவரின் மனைவி மற்றும் மகளை ஹைதராபாத்துக்குக் கடத்திச் சென்று பாலியல்ரீதியாக சதுர்வேதிகொடுமைப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து சதுர்வேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஏராளமான பெண் பக்தர்கள் போலீசாரிடம் தங்களுக்கு சதுர்வேதிசெய்த கொடுமைகளை தைரியமாக நேரில் முன் வந்து விளக்கினர்.
பலரும் தங்களது பணம், நகைகள், நிலங்கள், வீடுகளை இவரிடம் இழந்ததாகவும் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து சதுர்வேதியின் சொத்துக்கள் குறித்து போலீஸர் தீவிர விசாரணை நடத்தியபோது தமிழகம் தவிர பல வெளி மாநிலங்களிலும்ஏராளமான சொத்துக்களை இவர் வாங்கிக் குவித்துள்ளது தெரிய வந்தது.
இவரது வங்கி லாக்கரில் போலீசார் சோதனையிட்டபோது கிலோ கணக்கில் நகைகள் (பல முழம் நீளமுள்ள தங்க பூணூல், தங்க அரைஞான்கயிறு உள்பட) பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நகைகளும் மெர்சிடீஸ் பென்ஸ் உள்ளிட்ட கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பகவான் கிருஷ்ணரைப் போல உடை, வேடம்அணிந்து கொண்டு பெண் பக்தைகளிடம் சில்மிஷம் செயல்களில் இவர் ஈடுபட்டுள்ளார்.
ஹோமே செக்ஸிலும் ஈடுபட்டதாக புகார் உள்ளது.
மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் சதுர்வேதி சாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து சதுர்வேதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷ்னர் நடராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஒரு வருடத்திற்கு சதுர்வேதி சிறையிலிருந்து வெளியே வர முடியாது. இந்த ஒரு வருடமும் விசாரணையே இல்லாமல் அவரைசிறையில் அடைத்து வைக்க முடியும்.
சதுர்வேதியுடன் அவரது சீடர்கள் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சதுர்வேதியின் சிறைக் காவலை சைதாப்பேட்டை 11வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் டிசம்பர் 30ம் தேதி வரைநீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சதுர்வேதியை நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரது காவலை நீதிபதி பிரபுதாஸ் நீட்டித்துஉத்தரவிட்டார்.
சதுர்வேதி வழக்கில் இந்த மாத இறுதிக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று உதவி போலீஸ் ஆணையர்அன்புமொழி தெரிவித்துள்ளார்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications