பாஜக காங்கிரஸ் இடையே ரகசிய டீல்? உச்சக்கட்ட கோபத்தில் அகிலேஷ் சொன்ன வார்த்தை! பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் லீக் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இது தனிப்பட்ட கட்சி சார்ந்த பிரச்சனை இல்லை என சாடிய அவர், காங்கிரஸுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏதேனும் டீல் ஏற்பட்டுவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளாகவும் கடும் அமளியுடன் நடந்து வருகிறது. நீட் வினாத்தாள் லீக் விவகாரம் மற்றும் டெல்லியில் மாணவர் போராட்டத்தின் மீதான போலீசார் தடியடி குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

Akhilesh Yadav India NEET congress BJP

அகிலேஷ் யாதவ்

மக்களவை புதன்கிழமை கூடியதும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும், நீட் வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து உடனடி விவாதம் நடத்தக் கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமளி நீடித்த நிலையில், காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பேச மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி வழங்கினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நாடாளுமன்றத்தில் பேச தங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், காங்கிரஸுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏதேனும் டீல் ஏற்பட்டுவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

டீல் ஏற்பட்டுவிட்டதா?

அகிலேஷ் யாதவ் மேலும் பேசுகையில், "காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஏதாவது டீல் ஏற்பட்டுவிட்டதா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் அவர், "இது சமாஜ்வாதி, காங்கிரஸ் அல்லது பாஜக பற்றிய பிரச்சனை அல்ல.. நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம். நீட் முறைகேடு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. மாணவர்களின் குரல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள்" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய போராட்டம் குறித்து பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்ப எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், பிரதமரின் இல்லம் வரை செல்ல வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. வேறு வழியில்லாததால் தான் நாங்கள் அங்கு சென்றோம்.

ஏற்கவே முடியாது

ஜூலை 20ம் தேதி மாணவர்கள் போராட்டத்தை போலீசார் கையாண்ட விதத்தை ஏற்க முடியாது. இவ்வளவு நடந்த பிறகும் நாட்டின் இளைஞர்களுக்காக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.. நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசுகிறார்.. ஆனால் அவைக்குள் பேச முடியவில்லையா? மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பலரின் கைகள், கால்கள் உடைக்கப்பட்டன. பெண் மாணவிகளின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாக கூட குற்றச்சாட்டுகள் உள்ளன. நம் மகள்களின் ஆடைகளை கிழிப்பதா? மாணவர்களை நடத்தும் முறை இதுதானா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

கிரண் ரிஜிஜு

முன்னதாக பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவே சொல்லி வருகிறோம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களிடமும் தெரிவித்துள்ளோம். விவாதத்தை எப்படி முன்னெடுப்பது என்பதை அவை தலைவர் முடிவெடுக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதத்தை தவிர்க்கவே காரணத்தை தேடி வருகிறார்கள்" என்றார்.

அதற்கு உடனடியாக பதிலளித்த காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், "விவாதம் நடத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அதற்கு முன்பு இதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். அதுவே எங்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+