கிரீஸ்: பஸ் கடத்தல்- இந்தியர் உள்ளிட்டோர் விடுவிப்பு
ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டில் பஸ்ஸைக் கடத்திய தீவிரவாதிகள் ஒரு இந்தியர் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளையும் இன்று அதிகாலை விடுவித்தனர்.
ஏதென்ஸ் அருகே இந்த பஸ்ஸை நேற்று இரு அல்பேனிய நாட்டுத் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தினர். இதையடுத்து அந்தபஸ்ஸை போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்தன.
இதையடுத்து டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 3 பேர் பஸ்சில் இருந்து குதித்துத் தப்பிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பயனாக முதலில் 6 பயணிகளை மட்டும் முதலில்விடுவித்தனர். பின்னர் மேலும் 19 மணி நேரம் பேச்சு நடத்தியதையடுத்து மிச்சமிருந்த 17 பயணிகளையும் விடுவித்தனர். இவர்களில் ஒருஇந்தியரும் அடங்குவார்.
இதையடுத்து இரு தீவிரவாதிகளும் போலீசாரிடம் சரணடைந்தனர். முன்னதாக தங்களிடம் இருந்து இரு துப்பாக்கிகள், கிரனைட்குண்டுகளை பஸ்சின் ஜன்னல் வழியாக தீவிரவாதிகள் வெளியில் வீசியெறித்துவிட்டு சரணடைந்தனர்.
முதலில் 1 மில்லியன் யூரோ பணம் கேட்டு மிரட்டிய தீவிரவாதிகள், அதைத் தராவிட்டால் பஸ்ஸை தகர்க்கப் போவதாக எச்சரித்தனர்.டிரைவரும் உடனே பஸ்சுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர்கள் கோரினர். இந்தக் கோரிக்கைகளை ஏற்க கிரீஸ் அரசு மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் சரணடைந்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications