டிவி சேனல் ஆரம்பிக்கவிருந்த சதுர்வேதி
திருச்சி:
சதுர்வேதியின் தற்போதைய பிரச்சினைகளுக்கெல்லாம், அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகிகள்தான் காரணம் என்றுசதுர்வேதியின் தந்தை ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த சதுர்வேதி சாமியார், சென்னை தொழிலதிபரின் மனைவி, மகளை ஹைதராபாத்துக்குக் கடத்திச் சென்று பாலியல்கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து சதுர்வேதியை போலீஸார் கைது செய்தனர்.
சதுர்வேதியின் வங்கிக் லாக்கரில் இருந்த ஏராளமான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சதுர்வேதி பெயரில் தமிழகத்தின் பலஇடங்களிலும், வெளி மாநிலங்களிலும் ஏராளமான சொத்துக்கள் இருப்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இந் நிலையில் சதுர்வேதி அமைத்த அறக்கட்டளையில் இடம் பெற்றிருந்த நிர்வாகிகள் செய்த குழப்பத்தால்தான் அவருக்கு இவ்வளவுபிரச்சினைகள் ஏற்பட்டு விட்டதாக அவரது தந்தை ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் இதுகுறித்து அவர் கூறுகையில்,
சதுர்வேதி அமைத்த அறக்கட்டளையில் இருந்த சில நிர்வாகிகளுக்கு சொத்துக்களைக் குவிக்கும் எண்ணம் வந்து விட்டது. இதற்கு ஆசிரமப்பணத்தை அவர்கள் பயன்படுத்த முயன்றனர். இதை சதுர்வேதி அனுமதிக்காத காரணத்தால் அவரது முதுகில் குத்தி விட்டனர். இப்போதுசெய்யாத தவறுக்கு எனது மகன் சிறையில் உள்ளான்.
இளம் வயதிலிருந்தே சதுர்வேதி ஞானம் மிக்கவராக திகழ்தார். ஆனால் அவரை துறவியாக்க நாங்கள் விரும்பவில்லை.பொய்யர்களையும், பித்தலாட்டக்காரர்களையும் அவரால் சமாளிக்க முடியாது என்று நாங்கள் நினைத்தோம். இதனால் சிறு வயதிலேயேஅவருக்குக் கிடைத்த புகழைப் பார்த்து நாங்கள் பயந்தோம்.
நிலங்களையும், வீடுகளையும் சதுர்வேதி வாங்கிக் குவித்துள்ளதாகக் கூறுவதில் அர்த்தமே இல்லை. அப்படி சதுர்வேதி நினைத்திருந்தால்,திருச்சியிலேயே செய்திருக்கலாமே? அதை விட்டு எங்கெங்கோ வாங்கிப் போட்டால் அதில் என்ன அர்த்தம் உள்ளது? அந்த நிலங்கள்,வீடுகள் எல்லாம் கோயில்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்தது.
தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் வைணவ தத்துவத்தை போதிப்பதே சதுர்வேதியின் ஒரே லட்சியமாகஇருந்து வந்தது. ஆனால் அவருடன் இருந்தவர்கள் செய்த தவறால் இப்போது சிறையில் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றுகூறினார் அவர்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications