ரூ.59.32 கோடி வெள்ள நிவாரணம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழகத்துக்கு 411.73 கோடி ரூபாயை வெள்ள நிவாரணமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த அக்டோபர் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பெய்த கன மழை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்,விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் உத்தரவிட்டேன். உடனடிநடவடிக்கையாக மாநில அரசின் துயர் துடைப்பு நிதியில் இருந்து ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்தேன். மேலும் உயிரிழப்பு ஏற்பட்டகுடும்பத்துக்கு தலா ரூ 50,000 வழங்க உத்தரவிட்டேன்.
இது தொடர்பாக கடந்த மாதம் 15ம் தேதிக்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், தேசிய பேரழிவு இடர்பாடு நிதியில் இருந்துதமிழ்நாட்டுக்கு ரூ. 411.73 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன்.
அத்துடன் வெள்ள சேதத்தை நேரில் ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்திருந்தேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் டி.எஸ்.மிஸ்ரா தலைமையில்ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவினர் வரும் 18 (நாளை) மற்றும் 19-ம் தேதிகளில் வெள்ளத்சேதம் ஏற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று நேரில்பார்வையிடுகின்றனர். வருகிற 20ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) என்னை சந்தித்து பேசுகின்றனர்.
மழை வெள்ளத்தால் தேசிய நெடுஞ்சாலைகளில் 178.79 கி.மீ. தூரமும், மாவட்ட சாலைகளில் 688 கி.மீ. தூரமும், மாநில தேசியநெடுஞ்சாலைகளில் 1470.53 கி.மீ. தூரமும் சேதம் அடைந்துள்ளது. பல்வேறு பாலங்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்த இடங்களில் மீண்டும் சாலைகள் போட 2-வது கட்ட தவணையாக ரூ. 20 கோடியை இன்று ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளேன்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் மணிமுத்தாறு பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு நான் ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன்.
அங்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கியுள்ளேன். மழையின்போது ஏற்பட்ட உடைப்புகளை அடைக்கவும்,குளங்களின் கரையை உயர்த்தி பலப்படுத்தவும் இன்று ரூ. 10 கோடி அனுமதித்துள்ளேன்.
இந்த வெள்ளத்தால் 3 .17 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகளுக்கு இயற்கை பேரழிவு நிதியில் இருந்து ரூ. 23.57 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளச் சேதத்துக்காக மத்திய அரசு ரூ. 411.73 கோடி ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
மத்திய நிபுணர் குழுவின் நிலுவையில் உள்ள மதிப்பீடு மற்றும் தேசிய பேரழிவு நிதியில் இருந்து உதவி வர வேண்டியுள்ளது. இந் நிலையில்இன்று மட்டும் வெள்ள நிவாரணத்துக்காக ரூ. 59.32 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளேன்.
இதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன். எனவே தேசிய பேரழிவு இடர்பாடு நிதியில் இருந்து மத்திய அரசுபோதுமான நிதியை ஒதுக்கீடு செய்யும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications