கர்ப்பிணி பெண் கடத்தி கொலை
சென்னை:
சென்னையில் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அவர் 50 நாள் கர்ப்பமாகஇருந்தார் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
கடத்தி கொலை செய்யப்பட்டவரின் பெயர் அனிதா. இவரது தந்தை அய்யப்பன். இவர் பாலக்காடு பகுதியிலிருந்து 1958-ம் ஆண்டுசென்னைக்கு வந்து குடியேறினார். சேமியர்ஸ் ரோட்டில் டீக்கடை வைத்திருந்தார். இவருக்கு அனிதா தவிர, அபிலாஷ், அஜீஸ் என்ற 2மகன்களும் உள்ளனர்.
அனிதாவின் கணவர் சேதுமாதவன் சிவில் என்ஜீனியரிங் படித்தவர். வேலை கிடைக்காததால் வடபழனி பொன்னியம்மன் கோயில்தெருவில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 7 வருடம் ஆகிறது.
அனிதா கடந்த 4 வருடமாக சென்னை சென்ட்ரல் ரெயில்வே அலுவலகத்தில் உள்ள அர்பன் வங்கியில் கிளார்க் வேலை பார்த்து வந்தார்.அனிதாவின் பெற்றோர் வீடு நந்தனம் விரிவாக்கம் 6-வது தெருவில் உள்ளது. பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு வந்த அனிதா குழந்தை பிறந்தபிறகு கணவர் வீட்டுக்கு செல்லவில்லை.
அனிதா வடபழனியில் வசித்தபோது பக்கத்து வீட்டில் குடியிருந்த அஸ்வின் என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இவர் ஒரு தனியார்வங்கியில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்தார்.
அனிதாவுக்கும், அஸ்வினுக்கும் தொடர்பு ஏற்பட்டதும் அதை கணவர் கண்டித்தார். மேலும் திருமணமாகி 6 வருடம் கழித்து அனிதாவுக்குகுழந்தை பிறந்தது. இதில் சேதுமாதவனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் குழந்தை பெற்ற பிறகும் அனிதா தாய் வீட்டில்தான் இருந்தார். அஸ்வின் அடிக்கடி அனிதாவிடம் போன் செய்து பேசியிருக்கிறார்.வேலை பார்க்கும் வங்கிக்கும் சென்று பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் கடந்த 14ம் தேதி அனிதா தாய் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டபோது அஸ்வினால் கடத்தப்பட்டார். இது தொடர்பாககணவர் சேதுமாதவன் சைதாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இந் நிலையில் கேளம்பாக்கம் அருகில் கோவளம் கடற்கரையைஅடுத்துள்ள தைலமர தோப்பில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.
போலீஸ் விசாரணையில் அது அனிதா என தெரிய வந்தது. பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருப்பதும்,முகத்திலும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் 50 நாள் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.கற்பழிப்பு இல்லை.
அனிதாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயின், 3 பவுன் செயின் மற்றும் செல்போனைக் காணவில்லை. தங்க வளையல்கள், கொலுசு,கடிகாரம் ஆகியவை அப்படியே இருந்தன.
தற்போது அஸ்வினை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அஸ்வினுக்கு சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. இவர் கடத்தலுக்குபயன்படுத்திய காரின் எண்ணை ஆட்டோ டிரைவர்கள் குறித்து வைத்துள்ளனர். போலீசார் கார் நம்பரை வைத்து விசாரித்த போது அதுமோட்டார் சைக்கிளுக்குரிய எண் என்பது தெரியவந்தது.
அஸ்வின் செல்போன் மூலம் கடந்த 2 நாட்களாக பலரிடம் பேசி உள்ளான். அந்த நம்பர்களை செல்போன் நிறுவனத்திடம் இருந்துபோலீஸார் வாங்கி விசாரித்து வருகிறார்கள். விரைவில் அஸ்வின் பிடிபடுவான் என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications