நீதிமன்ற கண்டனமும் ஜெ அரசும்: கருணாநிதி கிண்டல்
சென்னை:
நீதிமன்றங்கள் பலமுறை தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தாலும் அதையெல்லாம் தமிழக அரசு நற்சான்றிதழ்களாக எண்ணித்தான்நடந்து கொள்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் கூறியதாவது:
தீபா என்ற மாணவிக்கு மருத்துவக் கல்லூரி இடம் ஒதுக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.இதையடுத்து தலைமை நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ தமிழக அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார்.
இதுபோன்ற கண்டனங்கள் பலமுறை இந்த அரசு மீது தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அவற்றையெல்லாம் இந்த அரசுநற்சான்றிதழ்களாகத்தான் எண்ணி நடந்து கொள்கிறது.
ரூ. 720 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டபோது வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லை. எனவேதனது தவறை மறைப்பதற்காக, ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டி அதிலிருந்து நீர் எடுத்து சென்னைக்குவினியோகித்தார் ஜெயலலிதா.
அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே வினியோகிகப்பட்டதாகவும், இப்போது சரிவர தண்ணீர் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.இந்தத் தோல்வியால்தான் புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்தை ரூ. 300 கோடி செலவில் நிறைவேற்றி திட்டமிட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு எந்த திட்டத்தையும் சீர்தூக்கிப் பார்க்காமல் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்து அதிலே கித்தாப்பு தேடிக்கொள்ளப் பார்க்கிறது.
முதல்வர் பெயரால் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே தரப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திதெரியும். அதில் அறிக்கை வராததற்கு ஆறுதல் அடையலாம்.
ரெயில்வே வங்கி பெண் ஊழியர் கடத்தி, கொலை செய்யப்பட்டிருக்கிறார். காவல்துறை பொறுப்பை தன்வசம் வைத்திருக்கும் முதல்வருக்குஇதற்காக ஒரு விருது வழங்கலாம் என்றார் கருணாநிதி.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications