ஜெகஜால ஜெயிலர் சஸ்பெண்ட்
கோயம்புத்தூர்:
பெண் சிறை வார்டன், நர்ஸ் மற்றும் கைதியின் மனைவி ஆகியோருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த சிறைக் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய வழக்குகளின் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கோவை சிறையின் ஜெயிலராக இருப்பவர் ஜெயக்குமார்.
செக்ஸ் பைத்தியமான ஜெயக்குமாருக்கு ஏற்கனவே திருப்பூரில் வசிக்கும் நர்ஸ் ஒருவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதைத் தவிர கோவை சிறையின் பெண் வார்டனாக இருக்கும் பெண்ணுடனும் தொடர்பு இருந்து வந்தது.
இது தொடர்பான புகார்களால் பல முறை அதிகாரிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார் ஜெயக்குமார்.
இந் நிலையில் சிறையில் இருக்கும் தனது கணவரைப் பார்க்க வந்த ஒரு பெண்ணுடன் ஜெயக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் கைதியான தனது கணவரை அடிக்கடி சந்திக்க அந்தப் பெண்ணுக்கு சிறப்பு அனும்தி தந்தார் ஜெயக்குமார்.
இத்தனைக்கும் 58 வயதான ஜெயக்குமார் ரிடையர் ஆக 4 மாதம் தான் மிச்சம் உள்ளது. திருமணமாகி வளர்ந்த பிள்ளைகளும் இருந்தாலும் மன்மதனிடம் பாணத்தை வாங்கி வந்து காதல் அம்புகளை விட்டுக் கொண்டே இருந்தார் ஜெயக்குமார்.
இவரது லீலைகள் குறித்து புகார்கள் குவியவே அது குறித்து விசாரணை நடத்த கோவை சரக சிறைத்துறை டிஐஜி மிஸ்ரா உத்தரவிட்டார். விசாரணையில் ஜெயக்குமாரின் கள்ளத் தொடர்புகள் உறுதியானது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவருக்குப் பதிலாக தியோடர் செல்வின் புதிய ஜெயிலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications