பழம்பெரும் கிரிக்கெட் வீரர் விஜய் ஹசாரே மறைவு
வதோதரா:
இந்தியாவிற்கு முதல் டெஸ்ட் வெற்றியைத் தேடித் தந்த கிரிக்கெட் அணிக்குத் தலைமை வகித்த விஜய் ஹசாரே (89) காலமானார்.
நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1946ம் ஆண்டும் ஹசாரே தனது 31வது வயதில் இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் முதன் முதலாக இடம்பிடித்தார். ஹசாரே,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு எதிராக தலா 2 சதங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதமும்அடித்துள்ளார். அத்துடன் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
1952ம் ஆண்டு இவரது தலைமையிலான இந்திய அணிதான் டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றது. இங்கிலாந்திற்கு எதிரானபோட்டியில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
இவர் 30 டெஸ்டுகளில் விளையாடி, மொத்தம் 2192 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 47.65.
ஒய்வுக்குப் பின் இந்திய கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இருந்தார். ஹசாரேவுக்கு மனைவி, 2 மகள், மகன் உள்ளனர். இவரதுமறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹசாரேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிட்டகாங்கில் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் பேட்டியில் இன்றுஇந்திய அணியினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications