அன்பழகன்-83: கருணாநிதி வாழ்த்து
சென்னை:
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 83வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்தச் செலவில் 83 கிராம்எடையுள்ள தங்கச் சங்கிலியை அன்பழகனுக்கு அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு இன்று 83வது பிறந்த நாளாகும். இதையொட்டி திமுக சார்பில் அண்ணா அறிவாலயம் கலைஞர்அரங்கத்தில் இன்று முழுவதும் விழா நடத்தப்படுகிறது. இன்று காலை விழா தொடங்குவதற்கு முன்பு கருணாநிதி, அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அதன் பின்னர், தனது சொந்தச் செலவில் 83 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலியை அன்பழகனுக்கு அணிவித்தார். அன்பழகனுக்குதுணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் கவிஞர் அப்துல் ரகுமான் தலைமையில் பாட்டரங்கம் மற்றும் கவியரங்கம் தொடங்கியது. கவியரங்கத்தில் கவிஞர்கள் வாலி,வைரமுத்து, நிர்மலா சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த அனைத்தக் கட்சித் தலைவர்கள்கலந்து கொள்ளும் கூட்டம் நடக்கிறது. அப்போது அன்பழகனைப் பாராட்டி தலைவர்கள் பேசுகிறார்கள். முன்னதாக இன்று காலை அண்ணாசமாதிக்குச் சென்ற அன்பழகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications