பட்டாசு விபத்து: பலி 6 ஆனது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே உள்ள தாமல்வார் தெருவை சேர்ந்த சந்திரன், பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 16ம் தேதி இந்தக் கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிலாளர்கள் பலர் தீயில்சிக்கி உடல் கருகினார்கள். நாராயணன், உதயா, முருகன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலத்த தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரமேஷ், முருகேசன், ராஜாமணி ஆகியோர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.அவர்களில் ரமேஷ், முருகேசன் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்.
இந் நிலையில் ராஜாமணியும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே சரியான பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் அலட்சியமாக இருந்த கடை உரிமையாளர் சந்திரனை கைது செய்ய போலீசார்முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications