600 கோடி செலவில் புதிய சுகாதார வசதிகள்: ஜெ.
சென்னை:
ரூ.597.15 கோடி செலவில் அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில மக்களுக்கு சுகாதாரச் சேவைகள் அளிப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கும் வகையில் எனது தலைமையிலானஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.
தமிழக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கிட உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.597.15 கோடி மதிப்பில்தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்டம் என்னும் மாபெரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
நான் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் காரணமாக 110.83 மில்லியன் அமெரிக்கன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.502.95 கோடி) கடன்உதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அரசின் பங்கான 94.20 கோடியுடன் சேர்த்து மொத்தம் 597.15 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத்திட்டம் 2005-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
இதற்கான ஒப்பந்தம் வரும் ஜனவரி மாதம் உலக வங்கியுடன் செய்து கொள்ளப்படும். இத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 270மாவட்ட, வட்ட மற்றும் வட்டம் சாரா மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகளின் தரம் உயர்த்தப்படும்.
பேறுகால மற்றும் இளம் சிசுக்களுக்கான அவசர சிகிச்சைகளுக்கு 24 மணி நேர சேவை அளிக்க 62 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்தபேறுகால மற்றும் சிசு கவனிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
மேலும் இத் திட்டத்தின் மூலமாக தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக உயர் இரத்த அழுத்தம், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன் மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அதோடு மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து அரசுமருத்துவமனைகளிலும் மருத்துவமனைக் கழிவுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். தீவிர சிகிச்சை, இரத்த சுத்தி கரிப்புகளுக்கான மருத்துவ கருவிகள்,சுவாசக்கருவிகள், எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ரா சோனோகிராம் போன்ற நவீன கருவிகள் இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்குவழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications