நீதிமன்றத்தில் அப்பு ஆஜர்: 3 நாள் போலீஸ் காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Appu with S.P Premkumar போலீசாரிடம் துப்பாக்கி முனையில் சரணடைந்த கூலிப் படைத் தலைவன் அப்பு, இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.அவனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தில் மலையடிவாரத்தில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த அப்புவைகாஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான படை சுற்றி வளைத்தது. அங்கிருந்து தப்பியோட முயன்றவனை போலீசார் துப்பாக்கிமுனையில் பிடித்தனர்.

அங்கிருந்து அப்புவை தமிழக போலீஸ் படை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பியது. ஆந்திர எல்லையைத் தாண்டும் வரை மொத்தம் 4கார்களில் மாறி தமிழக போலீஸ் படை அப்புவுடன் பயணித்தது. காரில் வரும்போதே எஸ்.பி பிரேம் குமார் அவனிடம் விசாரணைநடத்தியபடியே வந்தார்.

பின்னர் இரவில் அவனை மகாபலிபுரம் கொண்டு வந்த போலீசா அங்கு ஒரு ஹோட்டலில் வைத்து விசாரித்தனர். நேற்றிரவு முழுவதும்விசாரணை நடந்தது. இன்று காலையும் தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்திய எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான டீம் இன்றுகாலை 11.30 மணியளவில் அவனை காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு எஸ்.பி. பங்களாவுக்குப் பின்புறம் உள்ள காட்டு பங்களாவில் வைத்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் இன்றுபிற்பகலில் அவனை காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் உத்தமராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், அப்புவை 7 நாட்கள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு அப்புவின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்பு ஒரு இருதய நோயாளி. எனவே அவரை போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்க அனுமதித்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே அப்புவை போலீஸ் காவலில் விட அனுமதிக்கக் கூடாது என்றுகூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், இன்று பிற்பகல் 3 மணி முதல் வரும் 22ம் தேதி மாலை 5 மணி வரை அப்புவை போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.

இதையடுத்து அப்பு காட்டு பங்களா எனப்படும் வனத்துறையினருக்குச் சொந்தமான கட்டடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குவைத்து அப்புவிடம் 3 நாட்களும் விசாரணை நடக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+