அப்புவை விழுந்து விழுந்து கவனித்த போலீஸ்!
காஞ்சி:
கூலிப் படைத் தலைவன் அப்புவை காஞ்சிபுரம் போலீஸார் மிகவும் டீசன்ட்டாக கையாண்டனர்.
சித்தூர் அருகே கைது செய்யப்பட்ட கூலிப் படைத் தலைவன் பலத்த பாதுகாப்புடன் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளான். மாமல்லபுரம்ஹோட்டலில் இரவில் விசாரிக்கப்பட்டபோது தயிர் சாதமும் சிக்கனும் கேட்டிருக்கிறான். உடனே அவை வரவழைத்துத் தரப்பட்டன.கூடவே இறால் வறுவலும் தரப்பட்டது.
நேற்று ஒரு உடையில் இருந்த அப்பு இன்று காலை காஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டபோது ஏதோ உலக வங்கி அதிகாரி தோரணையில்இருந்தான். புதிய உடையில் பளபளத்தான். பத்திரிக்கையாளர்களைப் பார்த்து அரசியல்வாதிகள் பாணியில் கையை அசைத்தான்.
அவன் கூடவே நேற்று போட்ட சட்டையுடன் வந்தார் எஸ்.பி. பிரேம்குமார்.
போலீசிடம் சிக்கிய பின்னர் மைத்துனரின் வீட்டில் இருந்து ராகுகாலம் முடிந்து 6 மணிக்கு மேல் கிளம்பலாம் என்று போலீசாரிடம்கூறியிருக்கிறான் அப்பு. இதையும் போலீஸ் ஏற்றது.
கிட்டத்தட்ட ஜெயேந்திரருக்குக் கொடுக்கப்பட்ட மரியாதைப் போல அப்புவுக்கும் மரியாதை கிடைப்பதாகத் தெரிகிறது. மற்றகுற்றவாளிகளான கதிரவன், சின்னா போன்றோரை நெட்டித் தள்ளியவாறும், முகத்தை மூடியும், முதுகைத் தள்ளிக் கொண்டும், இழுத்துக்கொண்டும் செல்லாமல், அப்புவை நிதானமாக நடக்க விட்டு பின்னால் பாதுகாப்பாக வந்தனர் போலீஸார்.
அத்தோடு அப்புவிடம் போலீஸ் அதிகாரிகள் சிரித்துப் பேசியவாறு சென்றதைப் பார்த்தால் அவரிடம் இதுவரை போலீஸ் தங்களதுஸ்டைலைக் காட்டவில்லை என்றே தெரிகிறது.
சித்தூரில் அப்புவுடன் போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்த எஸ்.பி. பிரேம்குமார் அவனிடம் சிரித்துப் பேசியவாறு நின்றிருந்தார்.
இன்று காலை காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவிற்கு அப்பு கொண்டு வரப்பட்டபோது, கூடியிருந்தவர்களைப் பார்த்து கையை அசைத்தவாறு,கிட்டத்தட்ட வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய தலைவர் போல உற்சாகமாக பங்களாவிற்குள் சென்றான் அப்பு.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications